ஜனாதிபதியின் கோரிக்கைக்கு விளக்கம் தேடி 5 நீதிபதிகள் கொண்ட குழு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு விளக்கம் தேடி 5 நீதிபதிகள் கொண்ட குழு!

ஜனாதிபதியினால் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் கோரப்பட்ட விடயம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், நீதிபதிகளான, புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என ஜனாதிபதியினால் நீதிமன்றத்தில் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

குறித்த நீதிபதிகள் குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதியின் வேண்டுகோள் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.