
வெளிஒய ஊடாக வட்டவலை வரைக்குமான 319.8 மில்லியன் ரூபாய் செலவில் செப்பனிடபட்ட காப்பட் வீதியினை நேற்று திறந்து வைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது உறையாற்றிய அமைச்சர், எதிர்வரும் 30,31ம் திகதிகளில் தமிழ் இளைஞர் யுவதிகள் 16,000 ஆயிரம் பேருக்கு இந்த நியமனம் வழங்கபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மலையகத்தில் உள்ள தோட்ட வீதிகளை புனரமைக்க விசேடமான முறையில் வேண்டுகோள் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் முன்வைத்துள்ளார். அதன் அடிப்படையில் தோட்ட புறங்களில் உள்ள வீதிகளை செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு இந்த நாட்டை நாங்கள் பொறுபேற்ற போது 74 கோடி ரூபா கடன் இருந்தது, குப்பை பிரச்சினை காணபட்டது, சைட்டம் பிரச்சினை காணபட்டது, மக்களிடயே வேறுபாடு காணபட்டது இவை அனைத்திற்கும் நாங்கள் ஒரு குறுகிய காலத்தில் தீர்வினைபெற்று கொடுத்துள்ளோம்.
நாங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். ஆனால் நான்கு வருடங்கள் இந்த அரசாங்கம் இருந்த போது திடீர் என எமது காலை வாரினார்கள், ஆகையால் தான் நாங்கள் தனியான ஒரு அரசாங்கத்தை அமைத்தோம். 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை ஒவ்வொரு தேர்தல் பிரிவுக்கும் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் ஊடாக 3000 மில்லியன் ஒதுக்கியுள்ளோம்.
இதுவரை காலமும் சமுர்த்தி பெறாத ஆறு இலட்சம் பேருக்கு சமுர்த்தி முத்திரையை பெற்று கொடுத்துள்ளோம். இந்த மாதம் முதல் சமுர்த்தி முத்திரை கிடைக்காதவர்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.