
முதற்கட்ட நடவைக்கையாக கொழும்பு மாநகர சபை கழிவுகள் எடுத்துச் செல்லவிருப்பதோடு, அதற்கமைவாக நேற்று (16) 10 கழிவுகள் நிரம்பிய லொரிகள் சென்றதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் சமூக ஆய்வாளர் நிமல் பிரேமதிலக்க தெரிவித்தார்.
புத்தளம், அருவக்கலு பிரதேசத்தில் அமையவிருக்கும் இரசாயன கழிவகற்றல் திட்டத்திற்காக கழிவுகள் புகையிரத வண்டிகளிலேயே எடுத்துச் செல்ல இருப்பதோடு, புகையிரத பாதைகள் புணர் நிர்மாணம் செய்வதன் காரணமாகவே லொரிகளில் எடுத்துச் செல்லப்படுவதாக பிரேமதிலக்க தெரிவித்தார்.
கழிவு சேகரிக்கும் இடம் வரையிலான புகையிரத பாதை வரும் மார்ச் மாதத்திற்குள் பூர்த்தியடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது கழிவு சேகரிக்கும் இடத்தில் 600 டொன் அளவில் சேகரிக்க முடியும் எனவும், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் 1200 டொன் வரையில் சேகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார.