
இந்த சந்திப்பு எதிர்கட்சித் தலைவரின் கொழும்பு விஜேராமயவில் உள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (23) காலை நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் இந்த காலகட்டத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சமகால அரசியல் விவகாரங்கள் பலவனவும் இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்டிருப்பதோடு இதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்