
இன்று (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனை தெரிவித்தார்.
விசேடமாக மொரட்டுவ பல்கலைக்கழகம், ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் என்பவற்றை இதற்கு முன்னுதாரணமாக குறிப்பிடலாம். இவற்றில் நடைபெறும் அடிப்படைவாத நடவடிக்கைகளை சாட்சியுடன் நிரூபிக்கலாம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
இந்தப் பல்கலைக்கழகங்களில் வஹாப் வாத முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வேறு மாணவர் அமைப்புக்களுக்கும் இந்த விடயங்கள் தென்படுவதில்லை. மூச்சுக் குழாய்கள் சிவப்பாக இருக்கும் சிவப்புத் தம்பிகளுக்கு அவர்களது எதிர்காலம்தான் அழிந்துகொண்டிருப்பது விளங்குதில்லையெனவும் தேரர் மேலும் தெரிவித்திருந்தார்.