
மகரகம பிரதேசத்தில் வைத்து குறித்த வண்டி மீட்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த வண்டி பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு இன்று ஆலோசனை வழங்கப்பட்டது.
அதன்படி சீ.ஏ.டீ. 8850 என்ற இலக்கத்தகடுடைய வௌ்ளை நிற டிபெண்டர் வண்டியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த டிபெண்டர் வண்டியின் சாரதி உட்பட இரண்டு பேர் கொழும்பு குற்றப் பிரிவில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.