
புதிய கூட்டணியின் சின்னம் அன்றைய தினம் முன்வைக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவிஸ்ஸாவனை, புவக்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை (19) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும், இரவு விழுந்த குழிக்குள் பகலில் விழப் போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.