
உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீட்சித் அனுமதிப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (20) மாலை 3.55 மணியளவில் அவர் காலமானார்.
இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகன்றனர்.
1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லி முதல்வராக 15 ஆண்டுகளாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அமைச்சர் சபையில் இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.