
இதனால் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று இரவு 08.00 மணிக்கு கைவிடப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் தமது கோரிக்கைகள் சம்பந்தமாக நேற்று மாலை பேச்சுவார்ததை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
அதற்போது எழுத்து மூலம் வழங்கப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.