
மீரிகமை வீதி , மைமாகொடை பகுதியில் உள்ள மூன்று கடைகளின் முன்பாக இவ்வாறு பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
நேற்று சனிக்கிழமை (20) இந்த பிரதேசத்தில் உள்ள சில கடைகளுக்கு சென்ற இனந்தெரியாத குழு ஒன்று இன்று (21) ஞாயிற்றுக்கிழமை கட்டுவபிட்டிய தேவாலயம் மீண்டும் திறக்கப்படவுள்ளதால் கடைகளை மூட வேண்டும் என்று கூறி அதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் கொடுத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (21) காலை கடை உரிமையாளர் ஒருவருக்கு அவரின் கடையின் முன்பாக பன்றின் தலை தொங்கவிடப்பட்டுள்ளதாக ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். கடை உரிமையாளர்கள் அதனை பார்க்கச் சென்றபோது மூன்று கடைகளின் வாயில் கதவில் பன்றிகளின் தலைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளதை கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கட்டானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-metro