
இன்று (21) அதிகாலை 04 மணியளவிலேயே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக யாழ் நிருபர் தெரிவித்தார்.
புத்தர் சிலைக்கு இரு கற்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சேதம் விளைவித்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை எனவும், அவ்விடத்தில் இரு குழுக்களிடையே சர்ச்சைகள் நிலவிவந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.