
ரஷீத் கான் 9 ஓவர்களுக்கு 110 ஓட்டங்களை கொடுத்து இது வரை சுழல் பந்து வீச்சாளர் ஒருவர் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக பட்ச ஓட்டங்களை கொடுத்து மிகவும் மோசமான பதிவினை தனது பெயருடன் இணைத்துக்கொண்டார்.
இதற்கு முன்னார் இந்த பதிவினை உலகில் அதி கூடிய விக்கட்டுக்களை வீழ்த்தியிருக்கும் பந்து வீச்சாளரான முத்தைய்யா முரளிதரனே பெற்றிருந்தார். அதாவது 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கெதிராக 10 ஓவர்களில் 99 ஓட்டங்களை கொடுத்திருந்தார்.
மேலும் ரஷீத் கான் கொடுத்த ஓட்டங்கள் உலக கோப்பு சாதனை மட்டுமில்லாமல், அவருக்கு 11 சிக்ஸர்களும் ஒரே இன்னிங்ஸில் விலாசப்பட்டிருந்ததும் போட்டியொன்றில் பந்து வீச்சாளர் கொடுத்த அதிக பட்ச சிக்ஸர்களாகும்.