
ராகமை, வெலிசர, குணசேகர மாவத்தையில் அமைந்துள்ள மின் உபகரண சேமிப்பு நிலையம் இன்று (18) அதிகாலை திடீரென தீப்பற்றியுள்ளது.
காலை ஆறு மணியளவிலேயே தீப்பற்றியதனை தொடர்ந்து கொழும்பு மற்றும் கம்பஹா மாநகர சபை தீயணைப்பு படையினர் மற்றும் கடற்படையினர் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் குறித்த சேமிப்பு நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
