தேசிய அடையாள அட்டைகளின் புதிய திருத்தங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய அடையாள அட்டைகளின் புதிய திருத்தங்கள்!

மற்றவர்களுக்கு உரித்தான தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது அல்லது புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் செயற்பாட்டு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளதுடன் இத்தகைய குற்றவாளிகளுக்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அல்லது 5 வருட சிறைத்தண்டனையை விதிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அருகில் உள்ள பொலிஸிற்கு அல்லது திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டை காணாமல் போகுமிடத்து, புதிதாக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்ட பின்னர் காணாமல் போன அடையாள அட்டை மீண்டும் கிடைக்குமாயின் கிராம உத்தியோகத்தர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.