
அலவாகும்புர பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர் ஒருவர் வீடொன்றிற்கு சென்றிருந்த குறித்த நபர் அதிக வெப்பநிலை காரணமாக வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த போது யானை அவரது தலையை மிதித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

