
நேற்றிரவு (19) 08:00 மணியளவில் பொலிஸ் அதிகாரி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொரி வண்டியொன்றும் ஒன்றுடம் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
34 வயதுடைய ஹொரவ்பொத்தான பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியே திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.