
மருத்துவமனைக்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது இளைஞருக்கு முகம், கழுத்து, மார்பு என ஆசிட் வீச்சால் தீவிரமாக காயம் ஏற்பட்டிருந்தது, அதே நேரத்தில் அவருடன் வந்த பெண்ணிற்கு கைகளில் சிறிதளவே காயம் இருந்தது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்தும் எப்படி இது நடந்தது என்றும் காவல்துறையினர் குழப்பத்தில் இருந்த வந்த நிலையில் தற்போது இதில் ஈடுபட்டவர் யார் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது.
இளைஞரிடம் விசாரித்த போது நாங்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது தொடுவதற்கு சிரமமாக இருப்பதாக கூறி ஹெல்மெட்டை அவரின் காதலி கழற்ற சொன்னதாக குறிப்பிட்டார்.
இந்த துப்பை கொண்டு பல மணி நேர தீவிர விசாரனையின் முடிவில் ஆசிட் வீச்சில் ஈடுபட்டது அவரின் காதலி தான் என்பது தெரியவந்தது.
இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த இளைஞரிடம் அவர் காதலி வற்புறுத்தியுள்ளார். எனினும் தனது காதலை முறித்துக்கொளும் மனநிலையில் அந்த இளைஞர் இருந்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக காதலனை சந்திக்க சென்ற காதலி தனது வீட்டில் இருந்த ஆசிட் பாட்டிலை தனது கைப்பையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹெல்மெட்டை கழற்றச் செய்து தனது காதலனின் முகத்தில் ஆசிட்டால் தாக்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.