
மூன்றாவது நாளாக துக்கம் அனுஷ்டித்து வரும் காத்தான்குடி மக்கள். இருட்டடிப்புச் செய்யும் ஊடகங்கள்.
கடந்த ஞாயிறு அன்று நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத மிலேச்சத்தனமான தாக்குதலைக் கருதி கடந்த மூன்று தினங்களாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் பொது நிறுவனங்களின் சம்மேளனம் காத்தான்குடி வர்த்தக சங்கம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா போன்ற நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று காத்தான்குடி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் துக்க தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.
காத்தான்குடி மக்களின் துக்க தினச் செய்தியை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்கின்றது வருந்தத்தக்கது.
ஊடகப் பணி என்பது நடுநிலை பேணி மக்களுக்கு உண்மை நிலைமையை எடுத்தியம்புவதே உண்மையான ஊடகப் பணியாகும் அதை விடுத்து ஒரு சமூகத்தின் செய்தியை மட்டும் வெளியிட்டால் அது அந்த சமூகத்தின் ஊடகமாக மாத்திரமாகவே கருதப்படும்.
சகோதரர் ஜூனைத் முஜீப்




