மேலும் இங்கிலாந்து அணி இன்றைய இரண்டாவது டி-20 போட்டியில் 137 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் 2-0 வீதத்தில் கைப்பற்றியது.
டி-20 இல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாக கிறிஸ் ஜோர்டன் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி 11.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

செயின்ட் கீட்சில் இலங்கை நேரப்படி இன்று (09) காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 32 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் சாம் பில்லிங் டி-20 இல் தனது அதிகூடிய ஓட்டங்களாக 87 ஓட்டங்களையும் ஜோ ரூட் 55 ஓட்டங்களையும் பெற்றனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்றது.
ஓட்டங்கள் அடிப்படையில் டி-20 போட்டிகளில் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய வெற்றி இது என்பதோடு டி-20 போட்டிகளில் இது நான்காவது மிகப்பெரிய வெற்றியாகும்.
இரு அணிகளுக்கும் இடையிலான இறுதி டி-20 போட்டி நாளை (10) செயின்ட் கீட்ஸ், வோர்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும்.