
வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக இன்று (22) பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னனி (JVP) தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசானாயக்க அவர்களினால் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களிடம் தொடுக்கப்பட்ட கேள்வியுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வினாவை தொடுத்தவுசன் பாராளுமன்றத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்ததுடன் சபாநாயகரும் தலையிட்டார்.
இதனடிப்படையில், வில்பத்து சரணாலயம் அருகில் அமைந்திருக்கும் விலத்திக் குளம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து குடியமர்த்தியுள்ளதாக கூறி நாகானந்த கொடிதுவக்கு மற்றும் பத்திரிகையாளர் மலிந்த செனவிரத்ன அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் ஜூன் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு கொண்டுவருவதாக நீதிமன்றத்தினால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனுவினை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் வன பாதுகாப்புத் திணைக்கள உயர் அதிகாரி அடங்காலாக பொறுப்பு கூற வேண்டும் என பெயரிடப்பட்டிருந்தது.
இதன் போது, அமைச்சர் ரிசாட் பதியுத்தீனின் சொத்துகுவிப்பு தொடர்பாக தேடி பார்க்க இலஞ்சம் மற்றுன் ஊழல் குற்றவியல் ஆணைக்குழுவுக்கு மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ரீதியில் புகார் செய்யப்பட்டிருந்தது.