
மருத்துவ அவசரநிலை ஏட்பட்டதின் காரணமாகவே இவ்வாறு அருகில் இருக்கும் விமான நிலையமான ருமேனியா நாட்டின் Bucharest சர்வதேச விமான நிலையத்தின் அனுமதியோடு தரையிறக்கம் செய்தது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இக்கொள்கையை கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் உடனடியாக நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.


சர்வதேச விமான விதியின் தொழில்நுட்ப விதிமுறைகளின்படி ஒரு தடவை விமானம் தரை இறக்கப்பட்டால் மறுபடியும் பொறியியல் சோதனைகளின் பின்னர்தான் பறக்க முடியும், மேலும் Bucharest சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொறியாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
விரைவில் குறித்த விமானம் நாடு திரும்பும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

