
பாணந்துறை - சரிக்கமுல்ல, திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு சிங்களவர்களால் தாக்கப்பட்டதை அடுத்து 2 சமூகங்களுக்கிடையிலான மோதலாக உருவாகியுள்ளது.
எனினும் பின்னர் அது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.