
உடப்பு மற்றும் அடிமுனை பிரதேசங்களை மையமாக கொண்டு புதிய பாலமொன்றினை நிர்மாணிப்பதற்காக இலங்கை ரூ. 4850 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாச அமைச்சினால் காலநிலை அச்சுறுத்தல்களை குறைக்கும் நோக்கிலே இந்த திட்டம் அமைக்கப்படவுள்ளன.
மேலும் அடுத்த திட்டமாக நாத்தாண்டிய தேர்தல் பிரிவுக்குற்பட்ட பிரதேசமான தல்விலயுல்யில் பாலமொன்றினை நிர்மாணிப்பதாகும்.
பாராளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கே பண்டார அவர்கள் நீர்ப்பாச இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலே இந்த திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது.
தல்வில (க்லப் பார்ம் பே) பாலத்தினை எதிர்வரும் 25 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரங்கே பண்டார தெரிவித்தார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார அவர்கள் புத்தள பிரதேசத்தில் ஏராளமான இடங்களில் வருடா வருடம் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தினை 75 வீதம் குறைப்பதற்காகவே இந்த பாலம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பல வருடங்களாக பல வகையான அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்து வந்த மக்களுக்காக கடந்த அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த பாலம் அமைக்கப்பட்டதன் பிற்பாடு வீட்டு சேதம், பயிர் நில சேதம் மற்றும் பல இழப்புக்கள் குறையுமெனவும், அனர்த்த நிவாரணத்திற்காக பல கோடி ரூபாக்கள் சேமிக்க முடியும் என அமைச்சர் ரங்கே பண்டார அவர்கள் தெரிவித்தார்கள்.
பாலத்தினை நிர்மாணித்து வாய்க்காலினூடாக வெள்ளத்தினால் சேகரிக்கப்படும் நீரினை கடலிற்கு அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நிர்மாணிக்கப்படும் பாலத்தினூடாக மக்களின் உயிர்கள் காக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.