
கொள்ளைக்காரர்களினால் இலங்கை தாய் நாட்டில் காடுகள் அழிப்பு உயர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்கள்.
அரசியல்வாதிகள் மற்றும் ஊழல் நிறைந்த அரச அதிகாரிகள் சேர்ந்து மரம் கொள்ளைகளில் ஈடுபடுவதினால் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்கள்
இன்று உலக காடுகள் தினத்தினை முன்னிட்டு பொலன்னறுவை திம்புலாகல-வெஹெரகல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.