
20 ஆம் அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் சம்பந்தமான கலந்துரையாடல் ஜே. வி. பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இன்று மாலை அமையப்பெற்றதாக தகவல் அறியக் கிடைத்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தலைவர் சம்பந்தன் அய்யா, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சேனாதிராஜா, தர்மலிங்கம் ஆகியோரும், ஜே.வி. பி. சார்பாக தலைவர் அனுர குமார திசானாயக்க, கட்சியின் தேசிய செயலாளர் டில்வின் சில்வா மற்றும் உறுப்பினர் லால்கான்த ஆகியோரும் பெலவத்த ஜே. வி. பி தலைமையகத்தில் ஒன்று கூடினார்கள்.