
நேற்று (10) மாலை 24 கிலோ கேரள கஞ்சாவினை கையிருப்பில் வைத்திருந்த 5 நபர்களை களுத்துறை காவல் நிலைய சட்ட அமுலாக்கப் பிரிவு கைது செய்துள்ளது.
காவல் துறை பிரிவினரால் மெற்கொண்ட அதிரடி சோதனைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் அலுத்கமை மற்றும் தர்கா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுகளை கொண்டவர்கள் எனவும், இவர்களை அலுத்கம காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் அறியக் கிடைத்தன.
கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் இன்று (11) களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
மேற்கொண்டு அலுத்கம காவல் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.