புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த தினங்களுக்குப் பதிலாக எதிர்வரும் 26 ஆம் திகதி மற்றும் 27 ஆம் திகதிகளில் பாடசாலை நடத்தப்படும்.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.