கடந்த பிப்ரவரி மாதம் மித்தேனியவில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேரின் உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மித்தேனிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், தனது இளம் மகன் மற்றும் மகளுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தந்தை சம்பவ இடத்தியிலேயே கொல்லப்பட்டார், மேலும் அவரது மகள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரது மகன் மறுநாள் உயிரிழந்தார்.
விரிவான விசாரணையைத் தொடர்ந்து, கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர். (யாழ் நியூஸ்)