பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டைகளை அணுகுவதற்கு ஏதுவான, நிகழ்நிலை முறையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, Online Registration என்ற இணைப்பின் மூலம் வாக்காகளர் அட்டைகளை பார்வையிடலாம்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள் சரியான அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும் என ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், இதுவரை தங்களின் வாக்காளர் அட்டைகளை தபால் மூலம் பெற்றுக் கொள்ளாத வாக்காளர்கள், தங்கள் வாக்காளர் அட்டைகளின் நிலையை அறிய, அருகிலுள்ள அல்லது உள்ளூர் தபால் நிலையங்களுக்குச் சென்று அதுகுறித்து கேட்டு அறிந்து கொள்ள முடியும்.