விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், இன்று (06) விடுவிக்கப்பட்டார்.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்றம் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திலும் இருந்து அவரை விடுவித்தது.