முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியல்!


சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்படாத சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


ரத்வத்தவின் மனைவியை நவம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 


அண்மையில் மிரிஹானவில் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் நம்பர் பிளேட் இல்லாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. 


கடந்த வாரம் மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  


விசாரணை நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்கள், சொத்தில் வாகனம் இருப்பதைக் கண்டுபிடித்த பின்னரே, வீடு ரத்வத்தேவின் மனைவிக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிந்துள்ளனர். 


அண்மையில் கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் காரை சொத்துக்குக் கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த விசாரணையின் போது கூறியிருந்தார். 


இச்சம்பவம் தொடர்பாக அக்டோபர் 31ஆம் தேதி லொஹான் ரத்வத்தே கைது செய்யப்பட்டு நவம்பர் 07ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.