ஹஜ் கமிட்டியில் பாரிய மோசடி; விசாரணை செய்யது அறிக்கை சமர்பிக்க உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹஜ் கமிட்டியில் பாரிய மோசடி; விசாரணை செய்யது அறிக்கை சமர்பிக்க உத்தரவு!


ஹஜ் கமிட்டியில் நடந்த ஊழல்கள்  சம்பந்தமாக இரு வாரங்களுக்குள் விசாரணை செய்து அரிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதம மந்திரி உத்தரவிட்டுள்ளார்.


ஹஜ் கமிட்டியில் தொடர்ச்சியாக நடந்து வரும் ஊழல்கள் சம்பந்தமாக அவ்வப்போது தகவல்கள் வெளி வருகின்றன.


ஹஜ் கமிட்டி என்பது புனித ஹஜ் யாத்திரைக்காக செல்லும் மக்களின் ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு,   சட்டத்தால் கூட்டினைக்கப்பட்டு இலங்கை உயர்நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு  சட்ட வரையறைகளைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். 


அண்மைக்காலமாக இது ஊழல் வாதிகளின், ஊழல் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கி,  கோடான கோடி ரூபாய்கள் ஊழல் செய்யும் அளவிற்கு மாறியது. தேர்தல்களின் போது தமக்கு ஆதரவு வழங்கும் ஆதரவாளர்களுக்கு பிழைப்புக்காக  கொடுக்கும் ஒரு இடமாகவும், தமது நண்பர்களை திருப்தி படுத்த பதவி வழங்கும் இடமாகவும் மாறியது.


கடந்த காலங்களில் இவற்றுக்காக நியமிக்கப்பட்டவர்களில், ஊழல் குற்றச்சாட்டுகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஊழல் காரணமாக சிறை சென்றவர்கள்,  ஊழல் காரணமாக சேவைகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள், மேலும் ஒரு  அமானிதத்தை, ஒரு பொதுச் சொத்தை,  நம்பிக்கையோடு  யளிக்க  எந்தவித தகுதியற்றவர்களுமே இதில் நியமிக்கப்பட்டார்கள். 


நம்பிக்கையும்,  தூய்மையும், புனிதத்துவமும் முதல் தரத்தில் பாதுகாக்கப்ப பாதுகாக்கப்படவேண்டி ஹஜ் கமிட்டியை,  இலங்கை கணக்காய்வாளர் பணிமனை பல முறை எச்சரிக்கை செய்து , கடந்த பத்து வருட வரலாற்றில் எட்டு வருடங்கள் நியாயத்தைத்தேடி  நீதிமன்றம் செல்லும் அளவிற்கு ஹஜ்கமிட்டியின் நிலை கேவலமாக மாறியது.


ஹஜ் காலங்களின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட பல கோடிகள்  பெறுமதியான 150  இலவச பேஸா விஸாக்களில் ஏற்பட்ட மோசடி, இது தொடர்பான முறையீடுகள் காரணமான சவ்தி அரேபியா அரசாங்கம் இதை 30 ஆகா குறைத்தது.


இதன் காரனமாக இலங்கையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டதோடு, பேஸா வீஸா பற்றாக்குறையின்  காரணமாக  ஹஜ் முகவர்கள் கடும் கஷ்டங்களை எதிர்நோக்கினார்கள்.


அத்தோடு இறைபக்தியாளர்களான வறிய,  ஏழை எளிய மக்களுக்காக சவுதி அரேபியா அரசரினால் வழங்கப்படும்,  கோடிகள் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாத அதி ஷொகுசு (ROYAL PESSENGER VISA) வில் இலங்கையின் முதல் தர வியாபாரிகளும், அரசியல் வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் சென்று வந்தமை ஒரு கவலைக்குரிய விடயமாகும்.


கடந்த காலங்களில் இவர்களின் ஊழல்கள் வெளியிடப்படுவதை மூடி மறைத்துக்கொள்ள இவ்வாறான விசாக்கள் மீடியா துறையைச் சேர்ந்தவர்களுக்கும் லஞ்சமாக வழங்கப்பட்டு,  இலவச வீசாவில் பலர் ஹஜ்க்கு சென்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் அரச  தரப்பில் தங்களின் வேலைகளை செய்து கொள்ள அரச உயர் அதிகாரிகளை திருப்திப் படுத்த இவ்வாறான விசாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.


அல்லாஹ் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே ஹஜ் கடமையை விதியாக்கினான். நாளை மறுமை நாளில் ஹஜ்ஜுக்கு செல்ல வசதியற்றவர்கள் அல்லாஹுவால் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்பதையும், இவ்வாறு சென்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் இவ்வாறாக ஹஜ் சென்றவர்கள் தமக்கு உரித்தாகாத வாய்ப்பை முறையற்ற விதத்தில் பெற்றுக் கொண்டமை பற்றியும் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்.


மேலும் கடந்த ஹஜ் யாத்திரையின்போது கூடாரக் கொள்வனவில் மீதமான 14  கோடி ரூபாய் பணம் இன்னும் ஹாஜிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை என்றும் ஹஜ் முகவர்கள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக ஹஜ் முகவர்கள் ஹஜ் கமிட்டியிடம்  வினவிய போது systems closed எனச் சொல்லப்பட்டதாகவும்  தெரிவித்தனர்.


சவுதி அரேபியா அரசாங்கமானது தனக்கு உரித்தில்லாத பணத்தை ஒருபோதும் தம்மிடம் வைத்திருப்பதில்லை. அவ்வாறானால் ஹாஜிகளிடம் பகிர்ந்தளிக்கப்படவேண்டிய பணம் எங்கே. இதை மீளப்பெற்று ஹாஜிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட தாமதிப்பது ஏன்?


மேலும் இம்முறை ஹஜ் முகவர் தரப்படுத்தலில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், 40 வருடங்களாக எந்தவிதமான முறைப்பாடுகளும் இன்றி மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லும் முகவர்களுக்கு 65 புள்ளியும், கடந்து மூன்று வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஹஜ்முகவர்களுக்கு 93 அதிக புள்ளிகள் வழங்கப்பட்டு, தற்போது இது பாரிய பிரச்சனையில் உள்ளதாகவும், இதற்காக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், ஹஜ் முகவர் ஒருவர் தெரிவித்தார்.


இதேவேளை உயர்நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் வழிகாட்டலில், ஹஜ் குழுவிக்கான முதிர்ச்சியும், முன்னே காலங்களில் அவர்களால் கொண்டு செல்லப்பட்ட ஹாஜிகளின் முறைப்பாடுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என, அனுமதிக்கப்பட்ட சட்டங்கள்  வரையறுக்கப்பட்டுள்ள போதும், நீதிமன்றத்தின் வழிமுறை  புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுகான முகவர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளும்போது 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என வழிகாட்டல் குறிப்பிட்டுள்ள போதிலும், ஹஜ் கமிட்டியானது தணிச்சைப்படி 150 000/= அளவிடுகின்றது. மேலும் இது இம்முறை ஹஜ் வழிகாட்டல்களுக்கு மாறாக 200 000/= அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


அரசு நிறுவனங்கள் கட்டணங்களின் போதும் பணப் பரிமாற்றங்களின் போதும் மஞ்சள் நிறமான பற்றுச் சீட்டுகளை நடைமுறையாக கைக் கொள்ளும் போது ஹஜ் கமிட்டி மட்டும் வெள்ளை நிறமான பற்றுச்சீட்டுக்களை விநியோகிப்பதில் பாரிய சந்தேகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் ஹஜுக்கு செல்லும் ஒவ்வொரு ஹஜாஜியும் 25000/= ரூபாய்களை திரும்ப திரும்ப மீழளிக்கப்படும் கட்டணமாக ( refundable  deposit) செலுத்தப்பட வேண்டும் என வழிகாட்டல் குறிப்பிட்டுள்ள போதிலும், ஹஜ் கமிட்டி உயர்  நீதிமன்ற வழிகாட்டல்களை மீறி மீழளிக்கப்படாத தொகையாக ( non refundable diposit )ஒரு ஹாஜியிடமிருந்து, 5000/= மீழளிக்கப்படாத கட்டணம் அளவிடப்படுகின்றது. 


மேலும் ஒரு ஹஜ் குழு அவர்கள் கூட்டிச்செல்லும் ஹாஜிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தலைக்கு 4000 ரூபாய் வீதம் குறிப்பிட்ட ஹஜ் முகவரிடம் அறவிடப்படுகிறது. இது அக்கீகரிக்கப்பட்ட ஹஜ் வழிகாட்டல்களுக்கு நேர்மாற்றமானதாகும்.


மூன்று முறை தன் இஷ்டப்படி ராஜினாமா செய்து ஹஜ் கமிட்டி தலைவர் மீண்டும் மீண்டும் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட மர்மம் என்ன?


இது சம்பந்தமாக அண்மையில் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித்த ஹேரத் அவர்கள் ஹஜ் கமிட்டி, வக்பு சபை சம்பந்தமாக பாரிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், தற்சந்தர்ப்பத்தில் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஹாஜிகளுக்கு சிரமங்கள் ஏற்படும் எனவும், எனவே இது தொடர்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த ஹஜ் முகவர்கள், இவற்றுக்கான நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் உள்ளதாகவும், ஹஜ் கடமை எதிர்வரும் மே மாதமே நடைபெற உள்ளதாகவும், கௌரவ அமைச்சர் அவர்களை ஒரு குழு தவறான முறையில் வழிநடத்தியுள்ளது எனவும் தெரிவித்தனர்.


மேலும் இவ்வருடம் ஹஜ் சட்ட வழிகாட்டல்களுக்கு அமைய ஹஜ்முகவர்கள் தரப்படுத்தப்படவில்லை  எனவும்,  இவ்விடயம் தொடர்பாகவும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களை மீறி தீர்மானங்கள் எடுத்தது தொடர்பாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும்  தெரிவித்தனர்.


கிடைக்கப்பெற்ற புதிய தகவலின் படி ஆட்சி மாற்றத்தை அடுத்து,  ஹஜ் கமிட்டியில் உள்ள சக அங்கத்தவர்களும் ராஜினாமா செய்துள்ளதாகவும், தற்போது எஞ்சி இருப்பது தலைவர் மட்டுமே எனவும் தெரிவிக்கப்படுகிறது.


-ஹில்மி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.