இலங்கையின் உத்தியோகபூர்வ சொத்துக் கையிருப்பு இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2024 ஒக்டோபரில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் படி, இது 7.9% கணிசமான அதிகரிப்பு ஆகும்.
இது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீன மக்கள் வங்கியின் (PBOC) மாற்று வசதியையும் உள்ளடக்கியதுடன், பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கும் உட்பட்டதாகும்.