வடமாகாணத்தின் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் 30 வருடங்களுக்கு பின்னர் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது.
பலாலி – அச்சுவேலி பிரதான வீதி 30 வருட உள்நாட்டு யுத்தத்தின் போதும் யுத்தம் முடிவடைந்து இன்னும் 15 வருடங்களுக்கும் மூடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த வீதியை திறந்து வைக்குமாறு வடமாகாண பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநரினால் இது தொடர்பான கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.
குறித்த வீதியை மீள திறப்பதில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் அமைச்சின் செயலாளரின் தலையீட்டில் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.