நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான முறைப்பாடு தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சருக்கு எதிராக மலேசிய வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
2010 – 2015 காலப்பகுதியில் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தல்துவ மேலும் தெரிவித்தார்.