சுவரொட்டி விவகாரம்; ஸ்ரீ ரங்காவை கைது செய்ய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவரொட்டி விவகாரம்; ஸ்ரீ ரங்காவை கைது செய்ய உத்தரவு!


சேறு பூசும் சுவரொட்டிகளுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவுக்கு தொடர்பு இருக்குமாயின், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு, கொழும்பு  பிரதம நீதவான் திலின கமகே, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் மிஹாலுக்கு எதிராக, சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் கொழும்பில் ஒட்டப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் ஒருவரை கைது செய்தனர்.


இந்த சுவரொட்டிகளை ஒட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, கூறினார் என, அவர் பொலிஸாருக்கு வாக்குமூலமளித்தார்.


 நீதிமன்ற உத்தரவின் பேரில் ரங்காவை கைது செய்ய கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸார் ரங்காவின் வீட்டுக்கு சென்றபோதும் அங்கு அவர் இருக்கவில்லை.


இதனால், உடனடியாக அவரை தேடிக்கண்டுபிடித்து மன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே, ​இன்று (22) உத்தரவிட்டார். 



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.