வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மும்பையிலிருந்து 96 பயணிகளும் 8 பணியாளர்களும் கொண்ட "விஸ்தாரா" விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பயணிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனை செய்யப்பட்டது.
அதற்காக வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் இராணுவ கமாண்டோ படை அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்தியன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எச்சரிக்கைகள் கடந்த சில வாரங்களாக இடம்பெற்று வருகிறது.