வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு!


தென்கொரியாவில் E-8 வீசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகள் வழங்கப்படவுள்ளதாக கூறி இடம்பெறும் பணமோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


தென்கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு தென்கொரியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் இதுவரையில் அவ்வாறான உடன்பாடு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும், அதன் மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.


குறுகிய கால வேலைகளுக்கு தொழிலாளர்களை அனுப்புவது அவசியமானால், இலங்கையின் மாகாண சபைகள், தென்கொரியா அரசுகளுடன் உரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.


E-8 விசா பிரிவின் கீழ், தென்கொரியாவில் வேலைகளை பெறுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ பணம் வழங்குவதை தவிர்க்குமாறும், பணத்தை மோசடி செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், சிறப்பு விசாரணைக்கு தெரிவிக்குமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வேலை தேடுபவர்களுக்கு அறிவுறுத்துகிறது. 


இதற்காக, பணியகத்தின் பிரிவு அல்லது ஹாட்லைன் எண் 1989 இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.