அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டி கடந்த 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாலபே ராகுல பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றது.
இதன் போது கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 17 மற்றும் 20 வயது பிரிவு அணிகள் போட்டியில் பங்குபற்றின.
இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏ.எஸ்.ஏ. மிஜ்வாத் 1st Board யில் விளையாடி தான் கலந்து கொண்ட ஆறு போட்டிகளில் 5.5 புள்ளிகளைப் பெற்று (5 வெற்றிகள், 1 சமநிலை) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் Board Champion ஆக தெரிவாகி கல்லூரிக்கும், பிரதேசத்திற்கும் பெருமை தேடித் கொடுத்துள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்து தயார்படுத்தி அழைத்துச் சென்ற கல்லூரியின் சதுரங்க பயிற்றுவிப்பாளர் எஸ்.எம்.சுஹ்தான் மற்றும் கல்லூரியின் சதுரங்க பொறுப்பாசிரியர் எம்.வை.எம்.றகீப் ஆகியோருக்கும் அதிபர் எம்.ஐ.ஜாபிர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இவ் வரலாற்று வெற்றிக்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபிர் (SLEAS) மற்றும் பிரதி, உதவி அதிபர்கள், போட்டியில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டிகளில் பங்கேற்கத் தேவையான உதவிகளை மேற்கொண்ட பாடசாலை நிர்வாகம், பாடசாலை அபிவிருத்தி, நிறைவேற்றுகுழு (SDEC) மற்றும் பழைய மாணவர்களுக்கும் தமது நன்றியினையும் தெரிவித்துள்ளது.