புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இடைநிறுத்தம்!


5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகளை, இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று

(30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


இதன்போது 5 ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் மதிப்பிடும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார். 


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வெளியாகி இருந்ததெனவும், அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.  


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.