காலிமுகத்திடலுக்கு அருகில் இன்று (31) பிற்பகல் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 5 பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.