தற்போது நிலவும் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடியதாக அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
"அக்டோபர் 15 t0 20 க்கு இடையில் அரசாங்கம் புதிய கடவுச்சீட்டுகளை வழங்க முடியும் என்று அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். இது கடவுசீட்டு பெரும் வரிசைகளை முடிவுக்கு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த காலக்கெடுவில் இதை அடைவோம் என்று நம்புகிறோம்" என்று ஹேரத் கூறினார்.