சாய்ந்தமருது ஜனாஸா அமைப்புக்கு ஜனாஸா வாகனமொன்றைக் கொள்வனவு செய்ய உதவி புரியுமாறு ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அமைப்பு சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெறும் ஜனாஸாக்களை இரவு, பகல் பாராது மழை, வெயில் என்று இல்லாமல் எதுவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி, மறுமைக்கான நன்மையை நோக்கிய பணியாக அமைப்பின் தொண்டர்களால் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தற்போது இந்த ஜனாஸா அமைப்புக்கு முக்கியமான ஒரு தேவைப்பாடாக ஜனாஸா வீடுகளுக்கு கதிரைகள், படங்குகள், போக்கஸ் லைட், ஜனாஸா குளிப்பாட்டும் தட்டு, துஆ வோட் , சந்துக்கு, மஞ்சி போன்றவற்றை கொண்டு செல்வதில் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இது இரட்டிப்பு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, இப்பொருட்களை ஜனாஸா வீடுகளுக்கு அவசரமாகக் கொண்டு செல்வதற்காக வட்டா ரக (வடி) வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்துகொள்ள சுமார் ரூபாய் 35 லட்சம் மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த ஜனாஸா வண்டி கொள்வனவுக்காக இதுவரை சுமார் (800.000/=) எட்டு இலட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது. அத்தோடு, தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட தொகையாக சுமார் (650.000/=) ஆறு இலட்சத்தி ஐம்பதாயிரமும் உள்ள நிலையில், இதனை அவசரமாகக் கொள்வனவு செய்து கொள்ளும் வகையில் தனவந்தர்களிடமும் நல்லுள்ளம் கொண்டவர்களிடமும் உதவியை நாடியுள்ளனர்.
மேற்படி வாகன தேவையினைப் பூர்த்தி செய்து, ஜனாஸா அமைப்பின் பணியினை மேலும் உற்சாகமாகக் கொண்டு செல்ல உங்களுக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தில் இருந்து ஸதகத்துல் ஜாரியாவாக உங்களால் முடியுமான பண உதவிகளை எமது கீழ் வரும் வங்கிக் கணக்குகளின் ஊடாக வைப்பில் இட்டோ அல்லது நேரடியாக எமது காரியாலத்திற்கு வந்து உங்கள் அன்பளிப்புக்களை கொடுத்து உதவுமாறும் அதற்கான பற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றனர்.
ஒரு பேரீத்தம் கீற்றை ஏனும் தர்மம் செய்து உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். ( ஹதீஸ்)
Janaza Welfare People's Forum,
Amana Bank, Kalmunai,
A/C. 011-053863-0001.
People's Bank Sainthamaruthu,
A/C 338-2001-5001-7865
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடியுமானவர்கள் தங்களால் இயன்றளவு கொடுத்து உதவி, ஈருலக நன்மையினைப் பெற்றுக் கொள்வோம்.
எம்.எஸ்.எம்.ஸாகிர்