மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (20) மாலை கும்புக்கன பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பலர் காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.