புதிய அமைச்சரவை இன்று (24) பதவியேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முதலில் அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் என்றும், அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் இடம்பெறும் அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
முன்னதாக, நான்கு அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.