ஒன்லைன் வீசா தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒன்லைன் வீசா தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை!

தனியார் நிறுவனமொன்றுக்கு ஒன்லைன் வீசா இலத்திரனியல் பயண அங்கீகாரத்திற்கான அனுமதியை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.


இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவதற்கான இலத்திரனியல் பயண அங்கீகார (ETA) முறையை கையாளும் வகையில் தனியார் நிறுவனங்களை கொள்வனவு செய்வதில் அதிகாரிகள் மேற்கொண்ட நடைமுறை மீறல்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் பல அடிப்படை உரிமைகள் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளில் பொது பாதுகாப்பு அமைச்சர், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, GBS Technology Services மற்றும் IVS Global FZCO, VFS VF Worldwide Holdings LTD, இலங்கை அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் அடங்குவர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.