
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 03ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான விசேட தினமாக செப்டெம்பர் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.