2024 ஆம் ஆண்டுக்கான சுற்றறிக்கையின் பிரகாரம் தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கு பிள்ளைகளை அனுமதிப்பது நிறைவடைந்துள்ளது.
அதன்படி, 26-07-2024 அன்று ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், பிள்ளைகளை அனுமதிப்பதற்கான கடிதங்கள் வழங்குவதையோ அல்லது அதிகாரிகளை இடமாற்றுவதையோ கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
கல்வித் துறையில் தொழிற்சங்கப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் மேற்படி தகவல் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.