ராஜபக்ஷ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜபக்ஷ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவு!


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் காரணமாக ராஜபக்ச குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


மஹிந்த ராஜபக்ச குடும்பத்தவர்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தவர்கள் பலர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். 


முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்சவும் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதுடன் அவருக்கே கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


யோசித ரோகிதவின் சந்தைப்படுத்தல் நிறுவனத்தை சேர்ந்த குழுவிடம் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.