இந்தியாவின் AI மாடலான ஸாரா ஷட்டாவரி உட்பட உலகின் பல AI மாடல்கள் இப்போட்டியில் கலந்துகொண்டன. அவற்றில், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த கென்ஸா லைலி எனும் AI மாடல் உலகின் மிஸ் AI பட்டம் வென்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அழகு ததும்பும் இந்த AI மாடல், ஹிஜாப் அணிந்த ஒரு லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளூயன்ஸராக சமூக ஊடகங்களில் இயங்கிவருகிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் ஃபாலோயர்கள் இந்த AI மாடலை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த மிரியம் பெஸ்ஸா என்ற தொழில்நுட்ப வல்லுநரால் இந்த AI மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
கென்ஸா லைலி உலக மிஸ் AI பட்டத்தை வென்றுள்ள நிலையில், இதை உருவாக்கிய மிரியம் பெஸ்ஸாவுக்கு 20,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொராக்கோ மற்றும் அரபு, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்களை தொழில்நுட்பம் சார்ந்து முன்னேற்றுவதற்காக இந்த AI மாடலை உருவாக்கியுள்ளதாக மிரியம் கூறுகிறார்.